Sunday, November 14, 2004

ஜெயேந்திரர் கைது - சில எண்ணங்கள்

ஜெயேந்திரர் கைது பற்றிய செய்தியும், அதன் பின்னணியும் இச்சமயம் அனைவரும் அறிந்த ஒன்றே. நானும் வலைப்பதிவுகளில் இது குறித்து எழுதப்பட்ட அனைத்தையும் படித்து விட்டுத் தான், இதை எழுதுகிறேன். குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை கைது செய்து விசாரிக்க வேண்டியது அவசியம் தான். ஆனால், இவ்விஷயத்தில் அது நிறைவேற்றப்பட்ட விதம் மிக்க கண்டனத்துக்கு உரியது. இரவோடு இரவாக, தனி விமானத்தில் பயணம் செய்து, மெஹ்பூப் நகரில் ஒருவரை கைது செய்தது, அனாவசியமாகவும் அபத்தமான செயலாகவும் தொன்றுகிறது. அவர் என்ன வீரப்பன் போல தப்பியோடக் கூடியவரா? அவரை அழைத்து விசாரணை செய்து அதன் தொடர்ச்சியாக அவரை கைது செய்திருக்கலாம். அவரும் ஒத்துழைத்திருப்பார்.

கலைஞரை இரவில் கைது செய்தபோது, வயதில் மூத்த ஒரு பண்பட்ட அரசியல் தலைவரிடம் அவ்வாறு நடந்து கொள்ளலாமா என்று பயங்கரமாக கண்டனம் தெரிவித்த பலர் இப்போது வாய் மூடி மௌனிகளாக இருப்பது ஏன்? ஜெயேந்திரரும் ஒரு பாரம்பரியம் மிக்க மடத்தின் தலைவர் தானே, அவரும் வயதில் மூத்தவர் தான், உடல் நலம் சற்று குறைந்தவர் தான்! முக்கியமாக, தனி விமானத்தில் ஆயுதம் தாங்கிய காவலரை அனுப்பி அவரை சென்னை கொண்டு வந்தது சற்று ஓவர் தான். அவ்வாறு ஆயுதம் ஏந்தியவரை விமானத்தில் அனுப்புவதற்கான அனுமதியும் உரிய அதிகாரிகளிடம் பெறப்படவும் இல்லை! மக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடிப்பது எவ்விதத்தில் நியாயம்?

ஜெயேந்திரரின் மீதான வழக்கு நேர்மையான முறையில் நடத்தப்பட்டு, அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அதே சமயம், அவருக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கக் கூடாது என்ற சிலரின் வாதத்திலும் அர்த்தமும் இல்லை, நேர்மையும் இல்லை!?! குற்றம் சாட்டப்பட்ட ஒரு அடிமட்ட அரசியல்வாதி கூட தன் செல்வாக்கை பயன்படுத்தி சிறையில் பல சலுகைகள் பெறுகிறார் என்பது நிதர்சனமான உண்மை! சொல்லப்போனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவறு செய்வது தான் ஜனநாயகத்தில் கண்டிப்பாக மன்னிக்கக் கூடாத ஒன்று. அவர்கள் தான் எந்த ஒரு சலுகையும் பெற முடியாத வகையில், சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பதே என் வாதம்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இங்கே வெறும் வாய் வார்த்தை தான் என்பதை யாரும் மறுக்க இயலாது. எனவே, ஜெயேந்திரரின் வயதையும், அவர் பெருமை மிக்க ஒரு மடத்தின் தலைவர் என்பதையும் கருத்தில் கொண்டு சலுகைகள் வழங்குவதால் ஒன்றும் குடி முழுகி விடாது! சிறப்புச் சலுகைகள் தரக்கூடாது என்று இப்போது பேசுகிறவர்கள் அழகிரி கைதானபோது அதைப்பற்றி வாயே திறக்கவில்லையே?!?

ஜெயேந்திரர் என்ற தனிப்பட்ட மனிதரின் பல செயல்களில் எனக்கும் உடன்பாடு கிடையாது. குறிப்பாக, அயோத்தி விவகாரத்தில் அவர் மூக்கை நுழைத்தது, திருப்பதி சென்று ஒரு குழப்பத்தை உண்டாக்கியது என பல விஷயங்கள் உண்டு. சிலர் சொல்வதை போல், அவரால் இந்து மதத்திற்கே களங்கம் என்ற கூற்றையும் என்னால் ஏற்க இயலாது. போப்பாண்டவர் உலகளாவிய கத்தோலிக்கர்களுக்கு தலைவராக இருப்பது போல், ஜெயேந்திரர் ஒன்றும் உலகளாவிய இந்துக்களுக்கு தலைவர் (அல்லது மதகுரு) இல்லை. அவரை தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மை சைவர்களின் மரியாதைக்குரியவர் என்று மட்டுமே கொள்ளலாம்! ஜெயேந்திரர் கொலை செய்யத் தூண்டினாரோ இல்லையோ, இச்சம்பவத்தினால் இந்துக்களுக்கு அவப்பெயர் வர காரணமாகி விட்டார். என்னவோ போங்கள், நாட்டில் நடப்பது ஒன்றும் நன்றாக இல்லை!

என்றென்றும் அன்புடன்
பாலா


13 மறுமொழிகள்:

said...

Hindus are Hindus' worst enemies.

said...

Dear Bala

One of the very few saner voices I heard in internet. Good analysis, I agree with you.

Anbudan
S.Thirumalai

மாயவரத்தான் said...

'Perisu' adhai arrest seytha podhu athu politcally motivated endru sonnadhu; ippodho Jayendrar arrest saridhaan endru solgiradhu. Thaa.Krishnan kolai vazhakkil Azhagiri arrest seyyapatta podhu Perisu eduvum statement vittadhaa endru yarum konjam sollungalaen

enRenRum-anbudan.BALA said...

காசி இப்பதிவுக்கான தனது பின்னூட்டத்தை எனது வேறொரு பதிவில் இட்டிருந்தார். அவரது
மறுமொழியையும், அதற்கான எனது பதிலையும் கீழே காணலாம்.

காசியின் மறுமொழி:
பாலாஜி,

பெயரளவுக்காவது நடுநிலைமையைக் காண்பியுங்கள். ஜெயேந்திரரைக் கைது செய்ததில் மிக முக்கியமான
வித்தியாசங்கள்:
1. நள்ளிரவில் திட்டமிட்டுக் கைது செய்யப்படவில்லை என்பது ஆந்திர முதல்வரின் அறிவிப்பிலிருந்து
தெரிகிறது. அதாவது நண்பகலிலிருந்து கைது செய்வதை தவிர்க்க முயன்றதாகவும் 12 மணிநேரம் தாங்கள்
தாக்குப்பிடித்ததாகவும், அதற்குமேல் அரசியல்சாசனப் பிரச்னை வரவாய்ப்பிருக்கவே விட்டுக்கொடுத்ததாகவும் சொல்கிறார். (அவரும் அரசியல்வாதிதானே, ஆன்மீக 'ஜகத்குரு' அல்லவே, எனவே பொய்யராக இருக்கலாமோ, எதுக்கும் ஜெயேந்திரரிடம் கேட்டுச் சொல்லுங்கள்:-)
2. அவரை தனிவிமானத்தில் அழைத்துவந்திருக்கிறார்கள். 'இழுத்து'வரவில்லை.
3. கட்டாயம் அந்த 12 மணிநேரக் காத்திருப்பிலும் அவருக்கு வரப்போவது முன்னமே தெரிவிக்கப்பட்டிருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஜூனியர்விகடன் பேட்டியே கூட இப்படிப்பட்ட நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதுதான். உடல்ரீதியாக எதுவும் நடக்க வாய்ப்பு இருக்குமானால் கட்டாயம் அதை படம்பிடிக்கவும் ஏற்பாடு செய்ய அவருக்கு சக்தி இருக்கிறது.

நிற்க.

எங்கோ யாரோ எழுதினதுபோல GTB வங்கிக்கெல்லாம் மக்கள் நம்பிக்கை கெட்டுப்போகாமல் இருக்க
திட்டமிட்டு முடிவெடுக்கமுடிந்த அரசு எந்திரங்கள், பலர் கொண்டாடும் (அல்லது 'அப்படி ஒரு பிமபத்தை
ஏற்படுத்தியிருக்கும்' என்றும் வைத்துக்கொள்ளலாம்) ஒரு ஆன்மீகத்தலைவரின் விஷயத்திலும் செய்திருக்கலாம். அவரைத் தனியே வைத்து விசாரித்திருக்கலாம். இது அவரையும் மிரட்டிப்பார்க்கும் ஒரு அரசியல். தான் தைரியசாலி என்று சொல்லிக்காட்ட ஒரு வாய்ப்பாக்க அம்மா செய்த வேலையாகவும் இருக்கலாம். எல்லாத்துக்கும் கருணாநிதியைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்காவிட்டால் 'சோ'வுக்கு வேண்டுமானால் உண்டது செரிக்காது போகலாம். உங்களுக்குமா?

--
Posted by Kasilingam to என்றென்றும் அன்புடன், பாலா at 11/14/2004 08:31:15 PM


என் பதில்:
காசி,

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. என் பதில்கள் இதோ!
என் பதிவின் கடைசி பத்தியை படித்த பிறகுமா "பெயரளவுக்காவது நடுநிலைமையைக் காண்பியுங்கள்" எனக் கூறுகிறீர்கள் :-) நான் யாருக்கும் ஆதரவாளன் இல்லை!

1. நள்ளிரவில் திட்டமிட்டுக் கைது செய்யப்படவில்லை என்பதை ஒப்புக் கொள்ளும் அதே நேரத்தில், ஒரு
வயதானவரை இரவில் அலைக்கழித்து, அதிகாலையில் ஒரு காவல் நிலையத்தில் 2 மணி நேரம் காக்க வைத்து பின்னர் நீதிபதியிடம் இட்டுச் சென்றது தவறு, தேவையற்றது என்பது என் ஆணித்தனமான கருத்து. இதனால் தான், கலைஞர் விஷயத்தில் நேர்ந்ததை சுட்டிக் காட்ட வேண்டியிருந்தது.

2. 'இழுத்து' வந்தார்கள் என்று நான் எங்கு கூறினேன்? 'கொண்டு' வந்தார்கள் என்று தான்
எழுதியிருந்தேன்! இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது என ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!

3. நீங்கள் உரைப்பது சரியே! ஆனாலும், அவருக்கு தெரிந்திருந்தும் அவர் டிராமா போடாமல் சாதாரணமாகத் தானே நடந்து கொண்டார். தான் கைது செய்யப்படப் போவதை பலருக்கும் கூறி ரகளை உண்டாக்குவதற்கு வாய்ப்பு இருந்ததல்லவா?

நிற்க.

சங்கர மடம் எனும் கப்பல் (கேப்டனை இழந்ததால்) மூழ்கி கொண்டிருக்கிறது, அதனால், அரசு தலையிட்டு அதனைக் காப்பாற்ற வேண்டும்(!) என்ற கோரிக்கையில் மட்டும் எனக்கு துளியும் உடன்பாடில்லை :-((

என்றென்றும் அன்புடன்
பாலா

அன்பு said...

கலைஞரை இரவில் கைது செய்தபோது, வயதில் மூத்த ஒரு பண்பட்ட அரசியல் தலைவரிடம் அவ்வாறு நடந்து கொள்ளலாமா என்று பயங்கரமாக கண்டனம் தெரிவித்த பலர் இப்போது வாய் மூடி மௌனிகளாக இருப்பது ஏன்? கலைஞரை இரவில் இழுத்து வந்தபோது, கேள்விகேட்கவேண்டிய இடத்தில் இருந்து கேள்வி கேட்காதவர்களெல்லாம், இப்போது உண்ணாவிரதம் இருப்பதும், பொதுக்கூட்டம்/தர்ணா நடத்துவதும்தான்...

அவர்கள் அப்போது கொடுத்த ஊக்கத்தில், முன்னனுபவத்தில்தான் இந்த விஷயம் நடந்திருக்கிறது. இதில் நீங்களும், நானும் வாத,எதிர்வாதம் செய்வது நமக்குத்தான் நேர இழப்பு.

enRenRum-anbudan.BALA said...
This comment has been removed by a blog administrator.
enRenRum-anbudan.BALA said...
This comment has been removed by a blog administrator.
enRenRum-anbudan.BALA said...
This comment has been removed by a blog administrator.
enRenRum-anbudan.BALA said...

அன்பு,

கலைஞர் கைதின்போது சன்டிவி அவருக்கு ஆதரவான ஒரு மிகப்பெரிய ஆயுதமாக இருந்தது என்பதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன் :-)

என்றென்றும் அன்புடன்
பாலா

enRenRum-anbudan.BALA said...
This comment has been removed by a blog administrator.
enRenRum-anbudan.BALA said...
This comment has been removed by a blog administrator.
அன்பு said...

கலைஞர் கைதின்போது சன்டிவி அவருக்கு ஆதரவான ஒரு மிகப்பெரிய ஆயுதமாக இருந்தது என்பதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன் :-)என்ன பாலா, உங்களோட கருத்தை என்னிடம் பலமுறை சொல்லி, ஆணித்தரமா திணிக்கப்பார்க்கிறீங்க:)

நீங்கள் சொல்வதுமாதிரி சன் டிவி அப்போது அந்த நிகழ்வுக்கு ஒரு மிகப்பெரிய ஆயுதமாக இருந்தாலும்கூட - அது குறைந்தபட்ச அளவுக்குகூட சாதிக்க இயலவில்லை.

அந்த கைது வழக்கில், கடைசியில் முதல் குற்றப்பத்திரிக்கையே தாக்கல் செய்யாமல், வழக்கு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது (அல்லது குற்றமே சாட்டபடவில்லை). அதன்பின்னர், குறைந்தபட்சம் வருத்தம், மன்னிப்பு கூட தெரிவிக்கப்படவில்லை. அப்போது ஜெயலலிதாவுக்கு முழு ஆதரவு தெரிவித்தவர் செலெக்டிவ் அம்னீஷியா அத்வானி அவர்கள்தான். அதனால்தான், வாஜ்பாய் சிறிது வருத்தம் அடைந்திருந்தாலும், முதலில் அருண் ஜேட்லி சிறிது காட்டமான எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் பின்னர் அனைவரும் அடங்கிவிட்டனர்.

கலைஞர் என்ன தப்பு முன்னர்/இப்போது செய்திருந்தாலும், அந்த சம்பந்தப்பட்ட நள்ளிரவு கைது முழுக்க முழுக்க பழிவாங்கல் நடவடிக்கைதான்.

இன்ற ஜேயேந்திரர் கைதில், பழிவாங்கலும் ஒரு பகுதி!

enRenRum-anbudan.BALA said...

அன்பு,
என்னுடைய கருத்தை பல முறை சொல்லி, அதை உங்கள் மேல் ஆணித்தரமா திணிக்கும் எண்ணமெல்லாம் எனக்கு நிச்சயமாக கிடையாது :-( Blogger-காரர்களைத் தான் கேட்க வேண்டும்! நான் ஒரு தடவை தான் பின்னூட்டமிட நினைத்தேன். அதென்னவோ SPAM type-இல் repeat ஆகி விட்டது :-)
How to delete selected comments from my blog? Please explain.
என்றென்றும் அன்புடன்,
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails